Friday, November 18, 2022

காதல் - ஒரு பித்து



கோவின் கைகண்ட போர்வாளின் வழிவந்த திமிர் அணைத்த வெள்ளம் அது.

நேர்வந்து முன் நின்று நரகேலிகள் பல செய்து புவியோடு கருவானது.

உன்னுடன் என்னுடன் விளையாடி பழிதீர்த்து கண்ணோரம் கரை கடந்தது.

ஊனோடும் உயிரோடும் பகையாடிய பின்னாலே உறவொன்று மனதில் இட்டது!





சில்லரையும் சத்தமுமாய் நம்மை ஒன்றித்து உயிர்பித்து காலம் விதி செய்தது

சமகூரையின் வாயிலில் நின்றாடி வந்த தென்றல் உயிர் ஊற்றுக்கு வித்திட்டது.

கேலியும் நையாண்டியும் ஒற்றுமையும் அன்பும் வாழ்க்கையின் முறையானது.

உன் காதலின் சீற்றமும் ஆற்றலும் சாரமும் என் மூலத்தின் முதலானது!

 




A poem from my archives. I wrote this way back in 2013.

No comments:

Post a Comment