உமிழ் நீர் காய்வதற்குள் ஈரம் தந்தாய்
மனச்சோர்வு அண்டும் முன் நேரில் வந்தாய்
காலங்கள் போனதே உரையாடல்களில் அன்று
சமயம் பார்த்து நகைக்கிறது கடிகாரம் இன்று.
பொல்லாத நோய் வந்து வீழுந்து போனேன்,
சோர்வாலே தினம் நொந்து ஒடுங்கிப்போனேன்,
வாழ்கையில் தேர்வின்றி தோற்றுப்போனேன்,
மணமாலையில் சேர்வதற்குள் வாடிப்போனேன்.
உன் கடைக்கண் பார்வை பட்ட காற்று போதும்,
என் உள்ளமெனும் வெற்றுக்கடல் நிறைந்து போகும்.
உன் நினைவுகள் மனதை அரித்து கொல்லுதடி!
செல்வங்கள் பலவிருந்தும், நீயின்றி நான் ஏழையடி!
Ever since my first tryst with Tamil poetry, I have been in awe and in love with Mahakavi. This poem was my first attempt at writing poetry and I did not even think about what/who I should use as an inspiration. It was that easy and natural for me to decide. Circa 2010.

No comments:
Post a Comment